வகுப்பு 1–5:
குழந்தைகளுக்கு அடிப்படை அறிவு (வாசிப்பு, எழுதுதல், எண்கள்) எளிமையாக கற்பிக்கும் திறன். கதை, பாடல், விளையாட்டு முறைகள் பயன்படுத்தி கவனம் ஈர்த்தல். நல்ல நடத்தை வழிகாட்டல், பொறுமை, அன்பு, சித்திரம் மற்றும் செயல்முறை விளக்கம்.
வகுப்பு 6–9:
பாடங்களை விரிவாகவும் ஆர்வமூட்டவும் கற்பித்தல். கேள்விகள் கேட்க ஊக்குவித்தல், செய்முறை மற்றும் குழுப் பணிகள் அமைத்தல். தொழில்நுட்பம் (பவர் பாயிண்ட், வீடியோ) பயன்படுத்தும் திறன். மாணவர்களின் முன்னேற்றத்தை தொடர்ந்து மதிப்பீடு செய்தல்.
வகுப்பு 10–11:
தேர்வு நோக்கு கற்றல், விரிவான கருத்து விளக்கம். மாதிரி தேர்வுகள், கேள்வி பதில் பயிற்சிகள். மாணவர்களுக்கு விமர்சன சிந்தனை, நேர மேலாண்மை, சுயபடிப்பு வழிகாட்டல்.
வகுப்பு 12–13:
ஆழமான பாட அறிவு, ஆராய்ச்சி, திட்டப் பணிகள் ஒருங்கிணைத்தல். தொழில் மற்றும் உயர்கல்வி வழிகாட்டல், உரையாடல், விவாதம் நடத்தும் திறன். மாணவர்களை நேர்முகத் தேர்வுக்கும் போட்டித் தேர்வுக்கும் தயார்ப்படுத்துதல்.